-->

WhatsApp Vedio Mute? - New update coming

வரும்காலத்தில் வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யவுள்ளது. எனினும் தற்போதைக்கு பீட்டா வெர்ஷனில் மட்டும் இந்த வசதி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகமாக பயன்படுத்தும் செயலிகளில் வாட்ஸ்அப்பும் ஒன்று. அதனால் பயனர்களை மேலும் கவரும் வகையில் இதில் அடிக்கடி அப்டேட் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பும் வசதி வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தனிப்பட்ட சாட் அல்லது ஸ்டேட்டஸ்களில் ஆடியோ அல்லது வீடியோக்களை அனுப்பும் முன்னால் பயனர்கள் அதை ம்யூட் செய்து கொள்ளலாம்.

இந்த புதிய வசதி விரைவில் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் ஐஓஎஸ் பயனர்களுக்கு எப்போது இந்த வசதி வரும் என்ற தகவல் வெளியாகவில்லை.

வாட்ஸ் அப் செயலியைத் தொடர்ந்து அப்டேட் செய்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். அப்போது ஆடியோவை ம்யூட் செய்யும் வசதி தானாகத் திரையில் தோன்றும். அதைத் தொட்டு ஆடியோவை ம்யூட் செய்து வீடியோக்களை அனுப்பலாம், பகிரலாம்.

Post a Comment

0 Comments